நடிகை திரிஷா தனது ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், தனது நெருங்கிய நண்பரான விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியையும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளது இணையத்தில் டிராண்டாகி இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் தனது ஜாலி தருணங்கள் குறித்த வீடியோவை “A few moments from Aussie land” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், . விமானப் பயணத்தில் காபி குடித்து கொண்டே எடுத்த செல்ஃபி, முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு எடுத்த வீடியோ, ஆஸ்திரேலிய நகரத்தின் அழகை கழுகு பார்வையில் ரசித்த காட்சிகள், ஷாப்பிங், என பல நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.












