நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’. உருவாகி வருகிறது. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன் வித்யா பாலன் சுராஜ் வெஞ்சரமூடு, யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலே போலெலோ’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்தப் பாடலுக்கு நடிகை ஷாம்னா காசிம் (பூர்ணா) அதிரடி ஆட்டம் போட்டுள்ளார் ஏற்கனவே ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் தமன்னா ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அது பட்டித்தொட்டியெங்கும் வைரலானது தற்போது 2 ம் பாகத்தின் பாடலில் ஷாம்னா காசிம் குத்தாட்டம் போட்டுள்ளார்.
ரஜினிகாந்த்தும் இப்பாடல் காட்சியில் செம ஸ்டைலாக வலம்வருகிறார்.அலே போலெலோ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடி இருக்கிறார். கேரள கலாச்சார பின்னணியில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.