இந்தத் தொடக்க விழாவில் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மூத்த நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், சின்னத்திரை பிரபலம் மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, நடிகைகள் பிரகதி, காயத்ரி மற்றும் இயக்குநர் திரு, ஒளிப்பதிவாளர் அர்வி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நேரில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.இப்படத்திற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த பத்தாவது திரைப்படத்தின் படப்பிடிப்பும் இணையாகத் தொடங்கி முழு வீச்சில் நடைபெற உள்ளது. இதனால் சண்முக பாண்டியன் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களில் பிஸியாகியுள்ளார். சண்முக பாண்டியனின் புதிய படத்துக்கு ‘கிங் & குயின்ஸ்’ என டைட்டில் வைத்துள்ளனர்.இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன்தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்