அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’.இதில், கபில் வேலவன், ஜவஹர் சக்தி, சேகர் நாராயணன், வினோத் பிரான்சிஸ், அருண் குமார், பாலா கார்த்திக், துரை ஹரிகிருஷ்ணன்.உள்பட பலர் நடித்துள்ளனர்

பரபரப்பான கதைக்களக்கதை கொண்ட குறும்படம் ‘டிரான்ஸ்பர்’. ஒரே பணியில் ஈடுபடுத்தப்படும் இரண்டு காவலர்கள்,  கொள்கை வேறுபாடுகளால் பிளவுபட்டு, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு காவல்துறை நடவடிக்கையாகத் தொடங்கும் சம்பவம், படிப்படியாக காவல்துறைக்குள்ளேயே உருவாகும் மோதலாக மாறுகிறது. கொள்கை ரீதியான பிளவு, தொழில்முறை கடமையுடன் நேரடியாக மோதும் சூழலில், நிலைமை தீவிரமடைகிறது.

தொழில்நுட்பக்குழு விவரம்:
 
எழுத்து மற்றும் இயக்கம்: திலீபன்,
இணை இயக்குநர்: டி. ஜான்சன் மோகன்தாஸ்,
ஒளிப்பதிவாளர்கள்: பழனியப்பன் கதிர், நவீன் லோகநாதன்,
படத்தொகுப்பு: நாகூரன் ராமச்சந்திரன்,
இசையமைப்பாளர்: ஹரிஹரன் சுரேஷ்,