நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
தடையை உடைத்து அடுத்தகட்ட வேலையை நோக்கி நகர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தடை வாங்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நிலத்தில் எந்த சர்ச்சையும் இப்போது இல்லை. நடிகர் சங்க கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தகட்ட பணிகள் நாளை முதல் தொடங்கும். நடிகர் சங்க கட்டட பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து பிரமாண்ட விழாவோடு திறப்பு விழா நடக்கும். எந்த தவறுகளும் நடிகர் சங்க கட்டட பணிகளில் நடக்காது. எங்கள் கை சுத்தமானது. ஒரு நடிகர் தன்னுடைய கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. கமல் ஹாசன் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் , ஒரு நடிகனாக அவருக்கு பின் இந்த விஷால் நிற்பான்.
.