படம் குறித்து ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே, குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடமிருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகையாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நமக்கு மனநிறைவு தரும். அந்த உணர்வை ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் கொடுத்திருக்கிறது”.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் மு ன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். தமிழக வெளியீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மேற்கொண்டுள்ளார்.