“கருப்பட்டி” படத்தில் நடித்துள்ள விஜயராஜ் இந்தப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். புதுமுக நாயகனான விஜயராஜ் தனது இரண்டாவது படத்திலேயே இருவேடங்களில் நடிப்பது தமிழ் சினிமாவில் முதல்முறையாகும்.
மேலும் இதில் ராஷ்மிகா , ஐஸ்வர்யா , அப்புக்குட்டி , ஜூலி , கருத்தம்மா ராஜஸ்ரீ , கூல் சுரேஷ் , இமான் அண்ணாச்சி , ஜிப்சிராஜ்குமார் , சிசர் மனோகர் , கராத்தே ராஜா , லேகாஸ்ரீ , ரஞ்சன் , கலைவாணி, மீசை ராஜேந்திரன் , விஜயகணேஷ் , கிளி ராமச்சந்திரன் , ஆகியோருடன் கோட்டை கருப்பு மூவீஸ் சார்பில் ” ஒ ச ர ம் ” படத்தை தயாரிக்கும் நிலக்கோட்டை பானு இதில் பஞ்சாயத்து தலைவியாக தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நிலக்கோட்டை , செஞ்சி , சேலத்தில் உள்ள மேட்டூர் ஆகிய ஊர்களில் இந்தப்படம் வளர்ந்துள்ளது .
பாடல்கள் எழுதி , இசையமைத்து நடித்தும் வருகிறார் டி. எஸ். திவாகர். பவர்சிவா நடன பயிற்சியையும் , செந்தில் மாறன் ஒளிப்பதிவையும், அசால்ட் மதுரை சண்டை பயிற்சியையும் , சக்தி படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
படத்தில் பஞ்சாயத்து தலைவியாகவும் நடித்து நல்லதொரு பாசமான கதையை உருவாக்கி தயாரித்து வருகிறார் நிலக்கோட்டை பானு.
கதை , திரைக்கதை , வசனம் , எழுதி ஜனரஞ்சகமான படமாக இயக்கி வருகிறார்
பிரபு ராமானுஜம் .