“ வானவில் வாழ்க்கை படத்தில் பாடகியாக நடிதுள்ளேன் என் கேரக்டரின் பெயர் ‘வினிதா’ . நான் பாடியுள்ள ‘Super girl’ பாடல் அனைவரையும் கவரும். இப்பாடலுக்கு பிறகு எனது நண்பர்கள் அனைவரும் என்னை ‘Super girl’ என்றே அழைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன்.” என்கிறார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
“இப்படத்தின் மூலம் தமிழ் நன்றாக கற்றுகொண்டேன். நடிப்பு, ஆட்டம் என எனக்கு அனைத்தையும் கற்றுகொள்ளும் இடமாய் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த ஜேம்ஸ் சார் மற்றும் Ocenaa AJR சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள். பாடுவதுதான் எனக்கு மிக பிடித்தமான விஷயம், நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன்“ என கொஞ்சும் தமிழில் கூறினார் பாடகி/நாயகி கெசான்ட்ரா