பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர்.
நடிகர் சிவகுமார் என் சித்தப்பா !-நவரசநாயகன் கார்த்திக் பெருமிதம்!!
விழாவில் பாடகி பிருந்தா சிவகுமார், இயக்குனர்கள் கண்ணன், விஜய், அருண் வைத்யநாதன், சசி, ராதாமோகன், கௌரவ், எஸ் எஸ் ஸ்டான்லி, தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, ரகுநாதன், பி எல் தேனப்பன், மதன், நடிகர் விஜய் ஆண்டனி, ஷாந்தனு, சந்தோஷ் பிரதாப், இயக்குனர் பெரோஸ்,இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் பி கண்ணன்,தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, மைம் கோபி, விஜி சந்திரசேகர், மகேந்திரன், அகத்தியன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குனர் சுசீந்திரன், ரிச்சர்ட் எம் நாதன், கலை இயக்குனர் ஜாக்கி, எடிட்டர் சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்ஷ்மி, கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். ஜெகன் தொகுத்து வழங்கினார்.