உயிருடன் இருப்பவர்களை செத்துப் போயிட்டான்னு சொன்னால் ஊதிய உயர்வு கிடைக்குமோ என்ன எழவோ!
தமிழ்நாட்டில் கவுண்டமணி, செந்தில், இன்னும் சிலரை மீடியாவில் அடிக்கடி காலி பண்ணி வந்தார்கள். அவர்களும் மறுப்பு சொல்லிச் சொல்லியே அலுத்தும் போனார்கள். அதென்னமோ காமடி நடிகர்களை சாய்ப்பதில் அத்தனை சந்தோசம் ,தற்போது இந்த நோக்காடு கேரளத்துக்கும் பரவி இருக்கிறது.
2012-ல் ஜெகதி ஸ்ரீ குமார் என்பவர் விபத்தில் சிக்கி உயிர் தப்பியதே அந்த குருவாயூரப்பன் செயல் என்றாகி விட்டது. கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சே! மறுபடியும் தட்டி விடலாமே என்று மரித்து விட்டதாக கிளப்பி இருக்கிறார்கள்.
மகள் பார்வதி சோர்ந்து போனார். என்னத்தை சொல்லி திருத்த!
“ஏன்யா அவரை இப்படி செய்தியால் கொல்றீங்க.?அவர் நல்லாத்தான் இருக்கார்.ஆரோக்கியமுடன் இருக்கிறார்.அவருக்கு கெட்டது எதுவும் நடக்கல. செத்துட்டார்னு எழுதுறிங்களே, எங்களிடம் கேட்டிங்களா?செக் பண்ணிங்களா? மனிதாபிமானம்னு இருக்குமே அதெல்லாம் என்னாச்சு? நடிகன்னா எப்படியும் எழுதலாமா? அவர் மறுபடியும் சினிமாவுக்கு நடிக்க வர்றார். கொன்னு டாதிங்க!” என்று ரத்தக்கண்ணீர் வடித்திருக்கிறார் பார்வதி.