நான் ஆக்சன் ஹீரோனு சொல்லிக்க வெட்கப் படுறேன். படத்துல பசங்க கலக்கி இருக்காங்க. தற்காப்பு கலைகள் கத்துக்கோங்க. முக்கியமா குட் டச், பேட் டச் சொல்லி தரணும். இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக்கூடாது. ஜாக்கிசான் தான் வரணும். இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க. மியூசிக் நல்லா வந்திருக்கு. விவேக் எழுதியிருக்க பாட்டு ரொம்ப நல்லாருக்கு. விவேக் உண்மைய தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு. எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கத்துக்குடுங்கஎனக்கூறினார்.விழாவில் கலந்துகொண்ட சிம்பு பேசியதாவது,’
தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. விவேக் பரபரப்பு பேச்சு!
நான் இந்த மாதிரி விழாக்கெல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்த பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த குடுத்திருக்காரு. விவேக் ஒரு படத்துல நடிக்கும் போது ஒருத்தர ஒரு சீன் நடிக்க கேட்டேன். அவர் உடனே சரின்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது. இந்த படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்க னு தான் பாக்குறாங்க. பேரண்ட்ஸ் கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை போட்டிலாம் வேணாம். யாரு எத எடுத்துட்டு போக போறோம். நடிகர் சங்க விஷால எதிர்த்தேன். ஆனா நடிகர் சங்க கட்டிடம் கட்டும் போது நல்ல மனசோட விஷால் என்ன கூப்பிட்டாரு. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.நான் லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே லேட்டா போக மாட்டேன். நான் என் இஷ்டப்படி இருக்கிறேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன்.எனக்கூறினார்.