ஜூன் 22. தளபதியின் பிறந்தநாள். அன்றுதான் தளபதி 62 படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்படுகிறது.படத்தின் பெயரும் அறிவிக்கப்படுகிறது என்கிறார்கள்.
ஏஆர் ரகுமானின் இசையில் அண்மையில் கிழக்குக் கடற்கரையில் ஹிப்ஹாப் ஸ்டைலில் ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் எழுபது சதவேலைகள் முடிவடைந்து விட்டன,ஜூலைக்குள் இயக்குநர் முருகதாஸ் படத்தை முடித்து விடுவார் என்கிறார்கள். ராதா ரவி,பழ.கருப்பையா இருவரும் முக்கிய அரசியல்வாதிகளாக நடித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் கிறுக்குத்தனமான அரசியலுக்கு பஞ்சமா என்ன.இருவரையும் இயக்குநர் அந்த அரசியலுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.
தளபதி,கீர்த்தி சுரேஷின் காதல் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. அமெரிக்காவில் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியிருப்பதால் யூனிட் அடுத்த மாதம் வெளிநாடு கிளம்புகிறது.
சிறப்புச்செய்தியுடன் திரும்பட்டும் !