கிடா வெட்டி பொங்கல் வைக்கணும் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு அந்த வாய்ப்பு அடுத்த வருசம்தான் கிடைக்கும் போல.!
ஷங்கரின் மிகப் பிரமாண்டமான படைப்பு 2.0. இந்த வருடம் வந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். லைகாவும் ஷங்கரும் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தின் பெரும் பகுதி விஎப்எக்ஸ்,கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்கிற மந்திர,தந்திர ஜாலங்கள் நிறைந்ததாகும். ஒரே நிறுவனத்தில் கொடுத்தால் வேலைக்காகாது என்று எண்ணிய ஷங்கர் பல கம்பெனிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார், பட்ஜெட் 150 கோடியைத் தொட்டு விடும் போலிருக்கிறது, ஆனாலும் படத்தின் வேலைகள் முடிவதாக இல்லை. இயக்குனருக்கும் மன நிறைவைத் தருவதாக இல்லை.
அதனால் படத்தை 2019-ல் வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.