ஸ்ரீ ரெட்டிக்கு சப்போர்ட் அமலா பால்!

 

” படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் அதிகம்” என்கிறார் அமலாபால்.

ஏற்கனவே ஸ்ரீ ரெட்டி என்கிற ஒரு நடிகை “தன்னை எல்லோரும்  பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்”என்று தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லிவருகிறார். அவருக்கு சப்போர்ட் அளிக்கும் வகையில் கதாநாயகியான அமலாபால் தற்போது சொல்லி இருப்பது  ரெட்டியின் கையில் குச்சியைக் கொடுத்தது மாதிரி ஆகி இருக்கிறது.

“தங்களின் தாழ்வு மனப்பான்மையினால் பெண்களுக்கு அத்தகைய ஆபத்துகள் இருக்கிறது.இது எல்லாத் தொழிலும் இருக்கிறது.படுக்கைக்கு அழைக்கும் சமாச்சாரம் சினிமாவில் அதிகம் இருக்கிறது. தைரியமுடன் எதையும் எதிர்நோக்க வேண்டும்.சுயநம்பிக்கையை வளர்க்கவேண்டும்.மனதளவில் பலவீனமானவர்கள் சினிமாவுக்கு வரவேண்டாம்”என்கிறார் அமலாபால்!