புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் ‘கப்பல்’படத்தில் காதலுக்கும் ,நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளைஞனாக வருகிறார் வைபவ். இது குறித்து வைபவ் கூறுகையில், “ என் கதாப்பாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை பிரதிபலிப்பதால் ரசிகர்களை எளிதில் கவரும்.”
“தமிழ் சினிமா வரலாற்றிலயே எனது நண்பர்களாக வரும் கருணா, அர்ஜுனன், வெங்கட் மற்றும் கார்த்திக் மட்டும்தான் நண்பனின் காதலுக்கு வில்லனாய் வருபவர்களாக இருக்க முடியும். என் காதலை பிரிக்க இவர்களின் திட்டம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை இயக்குனர் கார்த்திக் மிகவும் நகைச்சுவையாய் கூறியுள்ளார்”