இன்று மாலை ஆறரை மணிக்குத்தான் ‘சர்க்கார்’ படத்தின் இசை விழா. சென்னை மாநகரத்திற்கு வெளியே..தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில்!
மந்திரம் ஓதி தாலி கட்டி ஐந்து பாடல்களையும் அமர்க்களமாக வெளியிடப் போகிறார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் டிராக் லிஸ்ட் விட்டதுமே தமிழ் ராக்கர்ஸ் அத்தனை பாடல்களையும் வெளியிட்டு விட்டது. உடனே அந்த இணையத்தை சன் முடக்கியது . அதனால் என்ன இன்னொரு இணையம் இருக்கவே இருக்கிறது என மெட்ராஸ் ராக்கர்ஸ் என்கிற புதிய முகத்தில் வெளியிட்டு விட்டார்கள்.
திருட்டு லட்டு என்றால் கசக்கவாப் போகிறது. ரசிகர்கள் டவுன் லோடு செய்து விட்டார்கள்.
பத்திரிக்கை அடித்தவன் ஒருவன் முதலிரவு கொண்டாடியவன் வேறொருவன் என்றாகிவிட்டது சர்க்கார் இசை வெளியீட்டுவிழா, களவாணிகளை பிடிக்கவே முடியாதா?