“காதல் தலைவன் வரவில்லையாம்,
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்,
தூது விட்டாலும் பதில் இல்லையாம்.
அவள் துடித்தாளாம், எண்ணித் தவித்தாளாம்”என்கிற கதை ஆகி இருக்கிறது, காற்றின் மொழி படம்.!
ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,இந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் தமிழில் ஜோதிகா நடித்துள்ளார். இவருடன்,விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சிம்பு இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், ஜோதிகா பிறந்த நாளில்,அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாரா வாரம் அதிக படங்கள் வெளியாவதால், இப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இப்படத்தை அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளிக்குப் பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளோம்என தனது ட்விட்டரில் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார் .