வைரமுத்து @vairamuthu 7 hours ago
இது கவிஞர் வைரமுத்து அடித்த டிவீட்.
இதைப் படித்துக் கொண்டிருந்தபோதே சக பத்திரிகையாளரின் போன் அழைப்பு.
“நண்பரே,,,நாடெல்லாம் அறிந்த பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் மீது ஆறு பெண்கள் பாலியல் வன்முறை புகார் தெரிவித்திருக்கிறார்கள்!”
“என்னவோய் சொல்றீர். அவர் பிஜேபி மந்திரி ஆச்சே.! இப்பத்தான் பிரகாஷ் எம்.சுவாமி என்கிற பத்திரிகையாளர் மீது ஒரு பெண் பாலியல் வன்முறை குற்றம் சாட்டினார். அந்தாளு அமேரிக்கா பறந்து விட்டார்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட பத்திரிகையாளர்கள் பலர் மாட்டி இருக்கிறார்கள். ” என்று சொன்னதும் நண்பர் சொன்ன மற்ற தகவல்கள்.
“மந்திரி சுஜ்மா ஸ்வராஜிடம் எம்.ஜே.அக்பர் பற்றி கேட்ட கேள்விக்கு மந்திரி வாயை திறக்கவில்லையாம். என்னய்யா ஜனநாயகம்?”
“அட போங்காணும்.! பிஜேபியின் பெரும்புள்ளி நிதின் கட்கரி ஒரு பெரிய உண்மையைச்சொல்லி இருக்கிறார். இத்தனை வருஷமாக மக்களை மடையர்களாக வைத்திருந்ததை பெருமையுடன் சொல்லி இருக்கிறார்.”
கேள்விப்பட்டதை சொன்னேன்.
“கடந்த எம்.பி.தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரியவில்லை.அதனால் இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி விட்டோம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்து விட்டோம். ஆகவே மகளிடம்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வற்புறுத்துகிறார்கள். அதையும் சமாளிக்க வேண்டும்” என்கிறார் நிதின்கட்கரி சிரித்தபடியே!”என்றேன்.
“அப்படின்னா கருப்புப்பணத்தைக் கைப்பற்றுவோம் ,ஒவ்வொருவர் அக்கவுன்டிலும் 15 லட்சம் போடுவோம்னு சொன்னதெல்லாம் புளுகா?” என நண்பர் கதறிவிட்டார். இதையெல்லாம் மறைப்பதற்குத்தான் பாலியல் வன்முறைகளை கிளப்பி விடுகிறார்களா என்பது தெரியவில்லை.தமிழ்ச்சினிமாவில் ஜான் விஜய் என்கிற முட்டைக்கண் நடிகர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அந்த பெண்கள் இத்தனை காலம் காத்திருந்து இதுதான் சரியான மாதம் என்பது போல ஒன்றாக சேர்ந்து சொல்கிறார்களே!