எப்போதோ நடந்த சம்பவம் என்றாலும் ஒருவர் புகார் கொடுத்துவிட்டால் அதன் மீது முதல் தகவல் அறிக்கை எனப்படுகிற எப்.ஐ.ஆர்.போட்டாக வேண்டும் .
அதை மராட்டிய போலீசார் இன்று நல்லவிதமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.
2008-ம் ஆண்டில் தன்னை நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த வாரம் புகார் செய்திருந்தார்,
புகார் நாற்பது பக்கத்துக்கு இருந்தது.
இதன் மீது மராத்திய போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். நானா, டைரக்டர் ராகேஷ் சாரங், தயாரிப்பாளர் சாமி சித்திக், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா ஆகிய நால்வர் மீதும் ஐ.பி.சி. 354, 509,ஆகிய பிரிவுகளின் படி பதிவாகி இருக்கிறது.
நானாவும் தன் மீது தனுஸ்ரீ அபாண்டம் சொன்னதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்,
எப்படியோ தனுஸ்ரீ வாயை அடைத்தாகி விட்டது.