‘பொன்மேனி தழுவாமல், பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமோ?” -இதுவும் ஒரு திரைப்படப் பாடல்தான் . எழுதியவரும் கவியரசு கண்ணதாசன்தான்! இவர் என்னை நினைத்து ,என் மீது மோகமுற்று எழுதியதுதான் இந்தப் பாடல். .நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. “என ஒரு பழம்பெரும் நடிகை பாலியல் சார்ந்த புகார் சொன்னால் சின்மயி என்ன சொல்வார்?
“ஆடவர் உலகைப் பழி தீர்க்க அழகே உன்னை அவன் தூது விட்டான்,நாடக நாட்டியம் ஆட விட்டான் நானடியோ இங்கு வாடுகிறேன்” !
நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் சின்மயி பற்றி சொல்வதென்ன?
“ஆண்டாள் வேற ஆள் வழியாக வந்திருக்கிறாளோ என்னவோ? புரட்டாசி மாதம் அவளுக்கு உகந்த மாதம் தானே? பாலியல் குற்றச்சாட்டுகளை உடனடியாக சொல்ல வேண்டும். 23 வருடங்களுக்கு முன் நடந்தது. நாற்பது வருசங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போதெல்லாம் மீ டூ ஆப்ஸ் இல்ல, இப்பத்தான் வந்திருக்கு.அதனால் சொல்கிறேன் என்று சொல்வது எப்படி ஏற்கத் தகுந்தது இல்லையோ அப்படித்தான் சின்மயி சொல்வதும்.!”என்கிறார் கருணாஸ்.
சின்மயி பதில் என்ன?