ஒவ்வொருவருக்கும் தனது திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை பிறரை காயப்படுத்தாத விதத்தில் அமைந்திருத்தல் இறைவனுக்கு உகந்ததாக இருக்கக்கூடும்.
இசைஞானி இளையராஜா தமிழ்ச்சினிமாவின் அரிய சொத்து. இவருக்கு முன்னதாக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி காலத்தினால்மறக்க முடியாத மெட்டுகளை தந்திருக்கிறார்கள்.இப்படித்தான் காலம்தோறும் வித்தகர்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இருந்த காலத்தில்தானே ஏஆர் ரகுமான் ஆஸ்கார் வென்று வந்தார்.
அண்மையில் ஒரு மகளிர் கல்லூரியில் பேசிய இளையராஜா சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். அவரது உயரத்துக்கு அது சரிதானா?
தளபதி படத்தில் ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ எனும் பாடலைப் பாடி முடித்ததும், அப்பாடல் பற்றி ராஜா பேசினார். ’”இந்த பாடலில் வரிகள் யாவும் மிகவும் சாதாரணமானவை. எந்த கவியரங்கத்தில் வாசித்தாலும் இவை சிறப்பான கருத்தையோ உணர்வையோ தூண்டாது.ஆனால் பாடலாசிரியர் வாலி அவர்கள் அவற்றை சிறப்பான இசையின் மீது வைத்ததால்தான் அவை காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன.’ எனக் கூறினார்.
இதே போல கண்ணதாசன் பாடல் ஒன்றையும் குறிப்பிட்டு எம் எஸ் வி யின் இசையால்தான் இந்த பாடல் சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.