திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிதோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி , கருங் குருணை, உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரியநெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன்..
ஆண்டுக்கொரு முறை தனது ஆதி திரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வையும், ஏற்படுத்தி வந்தார்.அவர் இன்று கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புப்பரிசுகள் பெற்றவர். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நடிகர் கார்த்தி விவசாயிக்கு ஆறுதல் சொன்னார்.
.
முகவரி :
சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை
செல் : 9952787998