எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள்…. தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.
தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ள யோகிபாபு. எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது என்கிறார் இயக்குனர் .
இப்படத்திற்காக ஸ்டூடியோவில் எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.இசை : ஜஸ்டின் பிரபாகரன்,ஒளிப்பதிவு : மகேஸ் முத்துசாமி.