கேப்டன் விஜயகாந்துக்கு தமிழர் திருநாளான பொங்கல்தான் சிறப்பான திருநாள். நடிகராக இருந்த காலத்தில் அமர்க்களமாக கொண்டாடிவிடுவார், எஸ்.எஸ்.சந்திரன்,ராதாரவி,சந்திரசேகர்,நெருக்கமான பத்திரிகையாளர்கள் என சபை நிறைந்திருக்கும். அரசியலுக்கு சென்ற பின்னர் அனேகமாக இந்த நட்பு வட்டம் கலந்து கொண்டது இல்லை. கட்சி மாச்சரியம் .ஆனாலும் போனில் வாழ்த்துகள் பரிமாற்றம்.
பழகும் பாணியில் மாற்றம் ஏதும் இருக்காது. ஒருமையில் பேசிக்கொண்டாலும் கண்ணியம் இருக்கும்.உரிமை இருக்கும்.
இந்த வருடத் தீபாவளியை சாலி கிராமத்தில் இருக்கிற தனது வீட்டில் கம்பி மத்தாப்புக் கொளுத்தி கொண்டாடினார். இது அவரே அனுப்பிய படம்.