தல அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பின் இறுதிக்கட்ட வேலைகள் புனேவில் நடந்து வருகிறது. குரூப் டான்சர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் மேலும் பத்து நாட்கள் வரை வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த சரவணன் என்பவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார்,. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள்.
சிகிச்சை முடியும் வரை அஜித் அங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் கவனித்திருக்கிறார்.உடலை சென்னைக்கு அனுப்பவும் சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். குடும்பத்துக்கான உதவியையும் செய்திருக்கிறார்,