ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது. அதன்படி சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளான .சர்கார் படத்தில் இடம்பெறும் கோமளவள்ளி என்ற பெயர் மியூட் செய்யப்பட்டுள்ளது. இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தியேட்டர்களில் அந்த காட்சிகள் இடம்பெறாது..இன்று காலை நடைபெறும் மறு தணிக்கை குழுவின் பார்வைக்கு பின் இது நடைமுறைக்கு வருகிறது.