வரும்16 ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘சித்திரம் பேசுதடி-2’, ‘உத்தரவு மகாராஜா’, ‘செய்’ ஆகிய 4 படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதில் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ தீபாவளி வெளியீடாக விஜய்யின் சர்கார் படத்துடன் இம்மாதம் 6-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இப்படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இப்படத்தின் ரிலீஸை அப்படக்குழுவினர் தள்ளி வைத்தார்கள். அதனை தொடர்ந்து ‘திமிரு புடிச்சவ’னை 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் ஏற்கெனவே இம்மாத்ம் 16-ஆம் தேதி வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரால் அனுமதிபெற்ற ‘செய்’ படத்திற்கு அப் படக்குழு எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை! இது குறித்து செய் படவிழாவில் நகுல் கண்ணீருடன் திமிரு பிடிச்சவனின் வருகையால் ஏற்கனவே செய படத்துக்கு கமிட்டான திரையரங்குகள்கிடைப்பதில் உள்ள சிக்கலை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினார். திமிரு பிடிச்சவான் படத்தை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை திமிருபிடிச்சவன் படக்குழு கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது வேறு வழியின்றி ‘செய்’ படத்தின் ரிலீஸை அப்படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர் . செய் படத்தின் புதிய வெளியீட்டு தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் அனுமதியுடன் விரைவில் வெளியாகவிருக்கிறது.