‘தல’ அஜித் இசிஆரில் பிரமாண்டமான மாளிகை புதிதாக கட்டிக்கொண்டு வருகிறார் .அந்த மாளிகையில் டப்பிங் தியேட்டர்,குட்டி சினிமா தியேட்டர், மற்றும் குட்டி விமானம் ஆராய்ச்சி செய்வதற்கான அறை எல்லாம் இருக்கிறது.அதை அவர் பார்வையிட்ட படம் என ஒரு படமும் வெளியாகி இருக்கிறது. அவை தலயின் பழைய படம்.
அவர் கட்டி இருக்கிற பெரிய வீட்டில் ஒரு குட்டி தியேட்டர் இருக்கிறது. குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கலாம்.டப்பிங் தியேட்டர் எதுவும் இல்லை. ஒரு சின்ன ஸ்டுடியோ புகைப்படம் எடுப்பதற்காக.அவ்வளவுதான்!
புதிதாக அவர் எதுவும் கட்டவில்லை.
கொட்டிவாக்கத்தில் அம்மா,அப்பாவுக்காக தனி வீடு. அதற்கு பக்கத்தில் அண்ணனுக்கு வீடு.
மற்றபடி குட்டி விமானத்துக்கான ஆராய்ச்சிகூடம் அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் இருக்கிறது. தனி மைதானம்,தனி அறை எல்லாம் பல்கலைக்கழகத்தில்தான் இருக்கிறது.அவை யுனிவர்சிட்டிக்கு சொந்தம்.