பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றாலே “அவ்வளவுதான் சோலி முடிஞ்சிரிச்சி”என்று ஊரும்,உலகமும் பேசத் தொடங்கி விடும். அப்படி பேச்சுக்கு ஆளாகிப் போனவர்தான் ‘சித்தப்பு’ சரவணன்.
சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக பேசப்பட்டது.
“என்னப்பு .ஊர்க்காரய்ங்க என்னவோ பேசிக்கிறாய்ங்களே ,நெசமா?”
” இல்லப்பு …நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது…அங்கு சிகிச்சை எடுத்திட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் சரியாகல. பிரைவேட் ஆஸ்பிட்டல்ல சிகிச்சை எடுத்துக்கிட்டேன்.மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் னு சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாய்ங்க
அதுக்குப் பிறகு ஒரு படத்தில் நடித்தும் விட்டேன்..இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல் இருக்கான்னு கேட்டு போன் போட்டு விசாரிக்கிறாய்ங்க. என்னத்த சொல்ல”.என்கிறார் சரவணன்.