பாயும்புலி படவிழாவில் அப்துல் கலாம் உருவப்பட திறப்பு !

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் பாடல்  வெளியீட்டு விழா  இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் விஷால், சூரி, ஜே.கே.ரித்தீஷ், மனோபாலா, நடிகை காஜல் அகர்வால், தயாரிப்பாளர் பாரிவேந்தர், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

இதையடுத்து,, விழாவில் கலந்து கொண்ட  அனைவருக்கும் பூங்கொத்துக்கு பதிலாக அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், ‘பாயும் புலி’ படத்தின் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையில் மிச்சமான பணத்தில் 2 பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை தயாரிப்பாளர் பாரிவேந்தரும், நடிகர் விஷாலும் இணைந்து வழங்கினர்.

Comments (0)
Add Comment