பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனுஷ் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளார். அதில் ” ரசிகர்களிடமிருந்து மாரி 2 படத்தின் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, எனது அடுத்த படம் குறித்து இப்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.