புத்தாண்டு விழா..சீரியல் நடிகைகள்,மது விருந்து.மட்டன் மசாலா!

இந்த வருஷம் புத்தாண்டு மதுரையில் பட்டையைக் கிளப்பப் போகிறது. சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். கட்டணம்தான் ஊட்டியை முறிக்கிறது. பேட்டா மாதிரி 4999 .இது ஜோடியோடு போனால்.! எல்லா கேளிக்கைகளும் இருக்கிறதாம். அழகு சீரியல் ஸ்ருதி,சந்திரலேகா சீரியல் ஸ்வேதா,ராஜாராணி ஸ்ரீ தேவி அசோக், பாசமலர் ஷாமிலி,கல்யாணப்பரிசு ஸ்ரீதிகா. சன் டிவி காமடி மதுரை முத்து,தொகுப்பாளர் ஆண்ட்ருஸ் ஆகியோர் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. 2 லார்ஜ் சரக்கு அல்லது ஒரு பாட்டில் பீர் உண்டு. வழக்கம் போல சாக்னா கடை அயிட்டம் எல்லாம் கிடைக்குமாம். களை கட்டுமா ,கலகம் நடக்குமா என்பது தெரியவில்லை.!