வர்மா திரைப்படம் குறித்து இயக்குனர் பாலா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,‘பத்திரிகையாளர்கள் படைப்பாளிகள் கவனத்திற்கு வர்மா பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன். படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு, விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேசவிரும்பவில்லை .இவ்வாறு பாலா கூறியுள்ளார்.