நீண்ட நாள் கழித்து பத்திரிகையாளர்கள் பக்கம் ஓதுங்கிய நடிகர் ஜெய்யை பார்த்த போது ஆச்சரியமா தான் இருந்தது. பேச்சு சுவாரசியமாத்தான் போய்கிட்டு இருந்தது. அப்படியே அவரோட காதல்,மற்றும் கல்யாணம் குறித்தும் பேசினோம்.திரையுலகில்
இப்ப கல்யாண சீசன் தொடங்கியுள்ளது.விஷாலுக்கு பொண்ணு ஓ.கே . கலயாணம் ஆகப்போகுது, ஆர்யாவுக்கும் கல்யாணம்னு செய்தி வெளியாகியிருக்கு.நீங்களும் யாரையும் காதலிக்கல,திருமணமும் இப்போதைக்கு இல்ல ன்னு சொல்லீட்டிங்க உங்க நண்பர் பிரேம்ஜிக்கு எப்ப கல்யாணம்னு கேட்டதும், “அண்ணே அது ஒரு சுவாரசியமான கதை.ஆக்சுவலா இதப்பத்தி பிரேம்ஜிக்கிட்ட கேட்டேன். ஏன்,இப்ப நான் நல்லா சந்தோஷமா தானே இருக்கேன். இதுக்கு மேல என்ன வாழ்க்கை வேணும்னு கேட்கிறார்.அவருக்கு கலயாணம் இப்போதைக்கு இல்ல. காரணம் அவர் (கல்யாணம்) பண்றதுக்கு ரெடியாயிருக்காரு.ஆனா,அவரை (கல்யாணம்) பண்றதுக்கு யாரும் ரெடியாயில்லை. அவரு ஏழு வருசமா ரெடியா தான் இருக்காரு..என்றதும் அந்த இடமே கலகல தான். ஆக்
சுவலா 2011- ல் இருந்து சரோஜா படம் முடிஞ்சதும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சோம்.ஆனா அவரு, ‘எனக்கு எதுக்கு பொண்ணு பார்க்கறீ ங்கன்னுடுவாரு’. சப்போஸ் பொண்ணுக்கு பிடிச்சு போயி, அவங்க மாப்பிளையை வீட்டில் வந்து பார்க்கும் போது தலைமுடிக்கு ஆரஞ்சு,சிவப்புன்னு கலர் கலரா அடிச்சுக்குவாரு. ஏண்டான்னா ,..’அப்பத்தான் என்னை பாத்து பிடிக்கலைன்னு சொல்வாங்க நண்பா ம்பாரு’.அவரு கதை அப்படி போய்கிட்டு இருக்கு.என்றதும் அந்த இடமே சிரிப்பு மயமாகிப்போனது.