ஹீரோக்கள் பண்ண முடியாத ஹீரோ கதை. அப்படின்னா..?

இது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், 

காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை.

நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன்  கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.

படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன்மாஸ்டர்கைவேலை.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இதுஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் நடிக்க  முடியாது

.பெண்களை  மகா கேவலமாக இழிவுபடுத்தி 90 எம்.எல் மாதிரி  வந்து கொண்டிருக்கும்  படங்களுக்கு  மத்தியில்  இது  கொண்டாடப்பட  வேண்டிய படமாக இருக்கும்.

த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாகஇருக்கும்.பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம்  பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார்.

தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜ் ஒளிப்பதிவுசெய்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபல விநியோகஸ்தர்.96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களைவிநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார்.