சங்கீதாவின் மறு பிரவேசம் எதனால்?

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி  தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி,ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர்,  சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

மிக முக்கிய வேடத்தில் சங்கீதா .

இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

ஏன் நடிக்கவில்லை,?

“எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது” என்றார்..

சங்கீதாதமிழரசன்