ஜி.வி.பிரகாஷ் படத்தின் சவுக்கிதார் நாய்!

தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘டபிள் மீனிங் புரொடக்ஷன்ஸ்”

ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். ஏஎல் விஜய் இயக்கும் படம்..அதன் பெயர் வாட்ச்மேன் .

இவர்கள் புதிதாக வெளியிட்டிருக்கிற போஸ்டரில் புத்திசாலித்தனமாக ஒரு வேலையை ஞாபகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏழை மக்களின் வீட்டை பாதுகாப்பது நாய் தானே! நாம் மறந்து விட்டதை அவர்கள் நினைவு படுத்தி இருக்கிறார்கள்.

 “அயம்  ஏ சவுக்கிதார்  டூ” என எழுதப்பட்ட  அட்டையை அந்த உயர் வகை நாய் கவ்விக் கொண்டிருப்பதைப்போல படம்.

தற்போது தேர்தல் கால சவுக்கிதார்கள் திடீரென வந்திருப்பதை போல “சவுக்கிதார்’நாயும் வந்திருக்கிறது,

இதில் ஏதாவது அரசியல் இருக்குமா சார்! பாஜகவை வம்புக்கு இழுக்கிறார்களா அய்யா?

அப்படியெல்லாம் இல்லை. 

அமைச்சராக இருக்கும்வரைதான் “மாண்பு மிகு”போட்டுக் கொள்ள முடியும். அதைப் போல தேர்தல்வரைதான் அந்த கட்சியினர் சவுக்கிதார்..அதன் பிறகு அவர்கள் என்ன போடுவார்களோ?

சவுக்கிதார்ஜி.வி.பிரகாஷ்குமார்வாட்ச்மேன்