தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘டபிள் மீனிங் புரொடக்ஷன்ஸ்”
ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். ஏஎல் விஜய் இயக்கும் படம்..அதன் பெயர் வாட்ச்மேன் .
இவர்கள் புதிதாக வெளியிட்டிருக்கிற போஸ்டரில் புத்திசாலித்தனமாக ஒரு வேலையை ஞாபகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஏழை மக்களின் வீட்டை பாதுகாப்பது நாய் தானே! நாம் மறந்து விட்டதை அவர்கள் நினைவு படுத்தி இருக்கிறார்கள்.
“அயம் ஏ சவுக்கிதார் டூ” என எழுதப்பட்ட அட்டையை அந்த உயர் வகை நாய் கவ்விக் கொண்டிருப்பதைப்போல படம்.
தற்போது தேர்தல் கால சவுக்கிதார்கள் திடீரென வந்திருப்பதை போல “சவுக்கிதார்’நாயும் வந்திருக்கிறது,