விக்னேஷ் சிவன் –சித்தார்த் மோதல்.!

பிரச்னை என வந்தால் எதிரான கருத்துகளும் வரும்.

ஆதரவு பத்து என்றால் எதிர்ப்பு அதில் பாதியாவது இருக்கும்.

அதைப்போலத்தான் நயன்தாரா மீதான ராதாரவி சொன்ன கருத்தும்.!

நடிகர் சித்தார்த் ‘சிட்டுக்குருவி ‘ரசிகர் .அடிக்கடி டிவிட்டரில்  வருவார். அதைப் போலவே நயன்தாராவுடன் லீவ் இன் ரிலேஷன்ஷிப் பில் இருப்பதாக சொல்லப்படும் நயனின் நண்பர் விக்னேஷ் சிவனும் சிட்டுக்குருவி ரசிகர்தான்.. ராதாரவி -நயன் பிரச்னையில் விக்னேஷ்சிவன் கடுமையான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

அதில்—

“மீடூ பிரச்சனை வந்த  போது எனது சினிமா வட்டாரத்து நண்பர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். காரணம் புரியவில்லை.பின்னர்தான் ஒரு முன்னணி பிரபலம் மீது பழிவரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
  தங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது களங்கம் வந்தால் மட்டுமே திடீரென பேசுவது வீரம்  அல்ல” என விக்னேஷ் சிவனை விமர்சித்து சித்தார்த் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள  விக்னேஷ் சிவன், “மீடூ பற்றி பேசவில்லை என்றால் அதில் நாட்டமில்லை என்றா அர்த்தம்?, நயன்தாரா எப்பொழுதும் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்.
நயனுக்கு  பிரச்சனை என  வந்தால் அது என்ன பிரச்சனை என்று கேட்காமல் அதை விட்டுவிட்டு, இந்த மாதிரியான தேவையில்லாத வாக்குவாதம் நடத்துவது வேதனை அளிக்கிறது “என்று பதிவிட்டிருக்கிறார் .

 

 

 

சித்தார்த்விக்னேஸ்வரன்