நடிகையின் பெயர் ஷித்தி!
இந்த மாதம் வெளியாகவிருக்கும் ‘ஜம்பலக்கிடி ஜிம்பா’ படத்தின் கதாநாயகி.
கொஞ்ச வயசு.பார்க்கிறதுக்கு பக்குவமான பொண்ணாத்தான் இருக்காங்க.
ஆனா இந்த சின்ன வயசிலேயே பொம்பள பேயை பார்த்திருக்காங்களாம்.
சித்தி சொல்றதை கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க.
“நானும் என் பிரண்டும் காரில் போயிட்டு இருந்தோம். எனக்கு கடவுள் பக்தி உண்டு.பேய்,ஆவி இதெயெல்லாம் நம்புறவ. செல்போனில் பேசணும்கிறதுக்காக காரை ஓரமா நிறுத்திட்டு பிரண்ட் பேசிட்டிருந்தான்.அப்ப பக்கத்தில இருக்கிற பில்டிங்கின் வாட்டர் டாங்க்பக்கமா ஒரு பெண்ணை பார்த்தேன். ஒயிட் சாரி. அந்தரத்தில நிக்கிறா. முதுகு எலும்பு சிலீர்னு ஆகிப் போச்சு. ஒரு நொடிதாங்க.அப்புறமா அவளை பார்க்க முடியல. அங்க ஒரு ஆவி அலையுது என்பது மட்டும் நிச்சயம் அந்தப் பக்கமா போறதையே விட்டுட்டேன்.” என்கிறார்.
கேட்கிறவன் கேணப் பயலா இருந்தா சேவலும் முட்டை போடும்! காளை மாடும் கன்னு போடும்!
எவ்வளவு அழகான பொண்ணு ,இப்பவே இம்புட்டு பொய் பேசுதே!