கிட்னியை விற்கவும் ரெடி! சுயேச்சை வேட்பாளரின் முடிவு,!

இப்படிப்பட்ட ஆட்களும் இருக்கத்தாங்க செய்றாங்க. 

அறுபட்ட  கைக்கு ஆயின்ட்மென்ட் கொடுக்காம ஆறுதலை தடவிட்டுப் போற ஆசாமிகள் வாழ்ற ஊரில் இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்றாங்க. 

“மக்களுக்காக கிட்னியையும் கொடுப்பேன் “னு ஒரு சுயேச்சை வேட்பாளர் துடியா நிக்கிறார். மனுஷன் செய்தாலும் செய்வார்னு  ஊர் மக்கள் சொல்றாங்க.

எங்கேன்னு கேட்கிறீங்களா?

அஸ்ஸாமில்.! 

சுக்கூர் அலி. 26 வயசு. பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை. சியாலி ஆற்றின் குறுக்கே மூங்கில் பாலம் கட்டுவதற்காக தன்னுடைய நிலத்தை விற்று உதவி செய்திருக்கிறார்.

“நானும் சின்ன வயசிலேர்ந்து பார்த்திட்டுத்தான் இருக்கேன்.அரசியல் வாதிகள் சொந்த நலனுக்காகத்தான் அரசியலுக்கு வர்றாங்க.மக்கள் நலனுக்கு ஒன்னும் செய்றதில்ல. ஆனா நான் வந்தால் மக்கள் நலனுக்காக என் கிட்னியை விற்கவும் தயங்க மாட்டேன்”என்று சொல்லுகிறார்.

உடம்பையே தானம் பண்ணினாலும் அரசியல்வாதிகள் இந்த மாதிரியான ஆட்களை ஜெயிக்கவிடுவாங்களா என்ன?

அசாம்தேர்தல்கிட்னி சேல்ஸ்சுக்கூர் அலி