ஐசரி கணேஷ் நீதியை சரிக்கட்ட முயன்றாரா?
By
admin on June 22, 2019
பாவம்,பாக்யராஜ் அவர் சார்ந்துள்ள அணி மீது இப்படி ஒரு அவப்பெயர் வரவேண்டுமா என்ன?
ஐசரி கணேஷ்,அனந்தராமன் ஆகிய இருவர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து தொடர்ந்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு,நடத்தும் முறை பற்றி உத்திரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டிருக்கிறார்.
ஐசரி கணேஷ் ,அனந்தராமன் இருவரும் இந்த வழக்கை எடுக்க வேண்டாம் என்று தன்னை தனியாக சிலர் மூலம் அணுகியதாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறி உள்ளார்.
அமைச்சர்களின் துணை இருந்தால் நீதிமன்றத்தை இப்படி எல்லாமா நினைக்கத்தோன்றும்?