விஜய் ஆண்டனிக்கு வசந்தகாலம்.!

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி. ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  ” ராஜ வம்சம் ” .இது ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.   உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

 

அரசியல்விஜய் ஆண்டனி