தனுஷுக்கு ‘இளைய சூப்பர் ஸ்டார்’பட்டம்!

வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில்  உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்  புதிய படத்தின் படப்பிடிப்பும் வேகவேகமாக நடந்து  வருகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் -துரைசெந்தில்குமார் இயக்கிவரும் படத்திற்கு ‘பட்டாசு’ என்ற தலைப்பு  முடிவு செய்யப்பட்டு,   தனுஷுக்கு இப் படத்தின் மூலம்  ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு  வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.