வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பும் வேகவேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் -துரைசெந்தில்குமார் இயக்கிவரும் படத்திற்கு ‘பட்டாசு’ என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டு, தனுஷுக்கு இப் படத்தின் மூலம் ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.