2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ‘சக்தி பிலிம் பேக்டரி’ படநிறுவனம் சார்பில் சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.
இவ் விழாவில்,நடிகர் சூர்யா பேசியதாவது,
“இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் சரியாக செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து, யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.
நடிகை ஜோதிகா பேசியதாவது,
“முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை.
ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது.
எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர்.
அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கல்யாண் பேசியதாவது,
“எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார்.
பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.
ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார்.
படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும், பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்.
தயாரிப்பாளர் சக்திவேல் பேசியதாவது,
“ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள்.
இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” இவ்வாறு அவர் பேசினார்.