பல கோடிகளில் ஸ்டண்ட் காட்சிகள் .சுந்தர்.சி.யுடன் விஷால் இணையும் படத்தில்!

காமடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி .
இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷ்ன்” படம் .
இது  இந்திய வரலாற்றில்  இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷ்ன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்ஷ்ன்”  என்றே பெயர் சூட்டிஇருக்கிறார்கள்.
ஏற்கனவே ஆக்ஷனில்  அரசியலில் பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் .இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீசர். .
ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்ஷ்ன் ,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருக்கிறார் .இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி .
மிக பிரம்மாண்ட படைப்பான  இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் அசார்பைசான்,கேப்படோசியா , பாகு  , இஸ்தான்புல் ,தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு,  பேங்காக் போன்ற இடன்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் ப படமாக்கப்பட்டிருக்கிறது     

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் .மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான  ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இதன் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

ஆக்சன்சுந்தர்.சிடிரைடன்ட்ரவிவிஷால்