எட்டு மனித ஓநாய்கள் ஒரு மூதாட்டியை வேட்டையாடிய கோரம்.!ரயில் நிலையத்தில்.!

வந்த செய்தியைப் பார்த்த போது குப்பென வியர்த்தது.

பாரதமாதாவின் புதல்வர்களா இப்படி செய்தார்கள் என்கிற  ஆச்சரியம் ரத்தநாளங்களில் அலையடித்தது.

வடக்கே கர்னல் ரயில் நிலையம்.

ஒரு மூதாட்டி ரயிலுக்காகக் காத்திருக்கிறாள் .54 வயது.

“அம்மா” என ஒரு குரல் .

தடியான ஆள். ” சாப்பாடு கொண்டாந்தோம் .நிறைய இருக்கு. வீணாக்க விரும்பல.சாப்ட வரீங்களா?” என அழைக்கிறான்.

பணிவும் பேசிய தோரணையும் அந்த மூதாட்டியால் சந்தேகப்பட முடியவில்லை.

எழுந்து போனாள். அருகில் இருந்த ஒரு ஷெட்டில் 7 பேர் இருந்தனர்.

இப்போதுதான் சந்தேகம் வருகிறது.

திரும்பி விரைந்து நடக்க ஆரம்பித்ததும் ‘மடேர் ‘ என அடி .எட்டு மனித ஓநாய்களும் அந்த மூதாட்டியை வீழ்த்தி ஒவ்வொன்றாக உடல் வேட்கையை தீர்த்துக் கொண்டன.

தளர்ந்து கிடந்த அந்த கிழவியை போகிற போக்கில் ஒருவன் இரும்புத்தடியால் ‘ தட்’ என தாக்கி விட்டு நடக்கிறான்.

காயம் பட்ட அந்த மூதாட்டியால் எழுந்து நடக்க இயலவில்லை.தவழ்ந்தும் நகர்ந்தும் சென்று போன் பூத்தை அடைந்து போலீசை அழைத்தாள்.

தற்போது சண்டிகார் மருத்துவமனையில்.!

நாடு எங்கேயோ போகிறது!

எட்டு பேர்ஒரு மூதாட்டிகர்னல்கூட்டு கற்பழிப்பு