வால்மேட் என்டர்டெயின்மெண்ட்பட நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் தயாரித்திருக்கும் புதிய படம், சிக்ஸர்.
இப் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தன் அனுமதி பெறாமல் தனது புகைப்படத்தையும், வசனங்களையும் இப்படத்தில் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாகவும், படத்தின் தயாரிப்பாளர்கள், தினேஷ் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
1991-ல் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சின்னத் தம்பி’ படத்தில் கவுண்டமணி மாலைக் கண் நோயாளியாக நடித்து நகைச்சுவையில் பின்னிப்பெடலெடுத்திருப்பார்.
நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கவுண்டமணி வைபவ் படக்குழுவுக்கு வக்கீல் நோட் டீசு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வக்கீல் நோட்டீசு விபரம் கீழே,