சத்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை நடத்தி வருகிறது.
சமூக மற்றும் சுற்றுபுற நல செயல்பாடுகள் பலவற்றிலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. காவேரி நதியை மீட்டெடுக்கவும் , விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை தொடங்கியுள்ளது.
இதனை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவு கோரி, அவர் நடிகர், நடிகைகள், மற்றும் அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் நேற்று மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு வந்தார். அங்கு நடிகர், நடிகைகளை சந்தித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்நிகழ்ச்சியில், ஆன்மிகம் மற்றும் காவேரி நதியை மீட்டெடுப்பது குறித்து உரையாற்றிய அவரிடம், அனைவரும் ஆசி பெற்று திரும்பினர்.